
வங்கி மேலாளர் என ஏமாற்றி மூதாட்டியிடம் ரூ 1.19 லட்சம் திருட்டு
பரமக்குடி வங்கிக்கு வந்திருந்த மூதாட்டியிடம் ரூ.1.19 லட்சம் ரூபாயை வங்கி மேலாளர் என்று கூறி திருடிச் சென்றவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
பரமக்குடி காந்திஜி நகரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. பரமக்குடி கீழ பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மனைவி பாண்டியம்மாள் வயது (55). கணவனை இழந்த நிலையில் வீட்டின் அருகில் அரிசி மாவு புட்டு வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார்.
இவர் பரமக்குடி காந்திஜி சாலையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில்
வைக்கப்பட்டிருந்த நகையை திருப்புவதற்காக ரொக்கம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாயுடன் வங்கிக்கு வந்துள்ளார்
அப்போது வங்கி மேலாளர் ஒருவர் என கூறிக்கொண்டு பாண்டியம்மாளிடம் இருந்த பணத்தை பெற்றுக் கொண்டு வங்கியின் வெளியே சென்று ஸ்டாம்ப் வாங்கி வருமாறு கூறியுள்ளார். வெளியே சென்ற பாண்டியம்மாள் வங்கிக்குள் வந்து பார்த்தபோது மூதாட்டியை ஏமாற்றி விட்டு பணத்துடன் வாலிபர் தப்பி ஓடிவிட்டார் என தெரியவந்தது.
இதனையடுத்து பரமக்குடி குற்றப்பிரிவு காவல் துறையினர் வங்கியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து பாண்டியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பரமக்குடி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.இச்சம்பவம் பரமக்குடி நகரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
