நெல்லை , கூத்தங்குழி அருகே கொலையில் ஈடுபட்ட எதிரிகள் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நடவடிக்கை.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் எதிரியான இராதாபுரம் வட்டம்,கூத்தங்குழி, சுண்டாங்காடை சேர்ந்த சந்தகுரூஸ் என்பவரின் மகன் சிலுவை அருள் சந்துரு வயது (19), ஜெய ஆரோக்கிய செல்வன் என்பவரின் மகன் பிரதீஸ் என்ற சஞ்சய் பிரதீஸ் வயது (19), கூத்தங்குழி, பாத்திமா நகரை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் டென்னிஸ் என்ற சிலுவைமிக்கேல் டென்னிஸ் வயது (21), அதே பகுதியை சேர்ந்த சூசைசந்தியாகு என்பவரின் மகன் வினிஸ்டர் என்ற அன்றன் சேவியர் வினிஸ்டர் வயது (30), கூத்தங்குழி சுனாமி காலனியை சேர்ந்த சிலுவை அலங்காரம் என்பவரின் மகன் இருதய யோவான் வயது (38), ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால், மேற்படி எதிரிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடங்குளம் வட்ட காவல் ஆய்வாளர் திரு ஜான் பிரிட்டோ அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், எதிரிகள் ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 16.09.2021 இன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
