Police Department News

திருச்சி காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து – மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சி காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திகுத்து – மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள சுண்ணாம்புகாரபட்டியில் விவசாயி ஜூலியட் சாந்தகுமார் என்பவர் சாலையில் அமர்ந்து தனது வாகனத்தை எரிக்க போவதாகவும், தொடர்ந்து சாலையை மறித்து ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியில் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார். தனது வாகனத்தை எரித்தார்.உடனடியாக சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் சோமரசம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அப்பொழுது போதை ஆசாமி சாந்தகுமாரை எஸ்.ஐ கார்த்திக் சாலையிலிருந்து எழுந்து வருமாறு அழைத்துள்ளார். மீண்டும் பிடிவாதமாக சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது காவல் உதவிஆய்வாளர் கைப்பேசியில் தகவல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, கையில் வைத்திருந்த பேனா கத்தியால் எஸ்.ஐயின் பிறப்புறுப்பு மற்றும் கை உள்ளிட்ட இரண்டு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.

தற்போது உதவி ஆய்வாளர் திருச்சி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து சாந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தான் அல்லிதுறை மேல சவுரியார்புரத்தை சேர்ந்த விவசாயி என்றும் கூறிவருகிறார். மருத்துவமனையிலும் அமர்ந்து தொடர்ந்து போலீசாருடன் கூச்சல் மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.