
தேவகோட்டை நகரில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடையின் பெயர் பலகைகள் அகற்றம்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் வீதியின் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளின் முன் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளால், அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாவதுடன், சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது. எனவே, சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.அதன் பேரில், தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் சார்பு ஆய்வாளர் பாலமுருகன், ஜெயமூர்த்தி மற்றும் காவலர்கள் ஆகியோர் தேவகோட்டை பேருந்து நிலையம், தியாகிகள் ரோடு, ராம்நகர் வரை இருபுறமும் உள்ள கடையின் முன் வைத்திருந்த பெயர் பலகை அனைத்தும் அகற்றப்பட்டது மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள
நடைபாதை கடைகளுக்கு சம்மன் ரசீது வழங்கப்பட்டது.
