
இந்திய திருநாட்டை உயர்த்திப் பிடிக்க வேண்டும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் என்ற உயர்ந்த நோக்கத்தை கடப்பாடாக உருவாக்கியதே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் – 1950 இன் 51(அ) பிரிவு ஆகும்.
இந்திய திருநாட்டை உயர்த்துவது எப்படி?
என்று நம்மை நாமே கேள்வி கேட்டோமானால் விடை தெரிய வரும்?
மனிதனது வாழ்வியல் நடைமுறை நெறி மிகுந்த விதிகளே உலகம் முழுவதிலும் இன்று சட்டமாக கடைபிடிக்கப்படுகிறது – என்பது உங்களுக்கு தெரியுமா?
நமது இந்திய கலாச்சாரம் – வாழ்வியல் நெறி மிகுந்த நடைமுறை – ஆகியவற்றை நாம் கடைப்பிடித்து ஒழுகுகிறோமா? என்பதை ஆராய்ந்தால் விடை பூஜியமே ? ஏனெனில் நேர்மையான மனித வாழ்க்கையை மிக சொற்பமான நபர்களே கடைப்பிடிக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அது தான் உண்மை?
நெறி மிகுந்த மனித வாழ்வியல் நடைமுறைகளை பிறழாமல் கடைப்பிடித்து வருவோர் உறுதியாக சட்டத்தை கடைப்பிடித்து ஒழுகுபவராகவே இருப்பர்?
நம்மை நாமே இது போல சுய பரிசோதனை செய்து கொள்வதும் – அவற்றை அரசு உறுதிப்படுத்திக் கொள்வதும் நடைமுறையாக இருப்பதே உண்மையான ஜனநாயக ஆளுமையாக இருக்க முடியும்?
இன்று அரசுத் துறைகள் / நீதித்துறை ஆகியவை மேற்கூறிய சுய பரிசோதனையை மேற்கொள்வது மில்லை ? பொதுமக்கள் இது போல் சுய பரிசோதனையை கடைப்பிடிக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில்லை.? ஏன்?
அரசும் / அரசுத் துறைகளும்/ நீதித்துறையும் நேர்மையாக இல்லை என்பதே காரணமாகும்.
பொதுமக்களுக்கு சட்டத்தை கற்றுக் கொடுப்பது மட்டுமே விழிப்புணர்வை தந்ததாக இருக்க முடியாது சட்டத்தை கடைப்பிடித்து ஒழுகுதலும் .அவசியம்
நேர்மையான நடைமுறையால் மட்டுமே ஒரு சமுதாயத்தை மாற்றி அமைக்க முடியும்? இந்த புரட்சிக்கு நாம் தயராக வேண்டும்?
நம் தேசத்தை உயர்த்துதல் என்ற உந்துகோலை ஊன்றி பிடிப்போம் / நேர்மையாக வாழ்வோம்/ நேர்மையாக வாழ்வோரை ஒருங்கிணைப்போம் உயர்வடைவோம். நம் தேசத்தின் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிப்போம் வாருங்கள்.
