தமிழக டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு அவர்கள், இன்றைய பெற்றோர்களுக்கு ஆலோசனை
இன்றைக்கு எந்த சானலைத் திருப்பினாலும் ஏதாவது ஆடல் பாடல் என்று குழந்தைகள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்
பிள்ளைகளின் கலையார்வம் சந்தோஷம் தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால், அது நிஜமாக குழந்தைகளின் கலை ஆர்வமா அல்லது பெற்றோரின் வற்புறுத்தலா என்பதுதான் அறிய வேண்டிய விஷயம்.
பெற்றோர்கள் விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட தன் குழந்தையை டான்ஸ் ஆடுவதுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள்
என்பதுதான் உண்மை. காரணம் தன் குழந்தை டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறது… அதன்மூலம் புகழ் கிடைக்கிறது என்பதுதான் காரணம். நான் அந்த கலையைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால், பிள்ளைகளுக்கு அதே அளவுக்கு விளையாட்டிலும் ஆர்வத்தை உண்டாக்கினால் நன்றாக இருக்குமே என்றுதான் ஆதங்கப்படுகிறேன்.
விளையாட்டில் சாதித்தால் நம் நாட்டிற்கு பெருமை
… நான் சினிமாவையோ நடனம் ஆடுபவர்களையோ குறை கூறவில்லை, அதில் சாதிக்க பலர் இருக்கிறார்கள். விருப்பம் இல்லாத உங்கள் பிள்ளைகளையும் அதில் கொண்டுபோய் திணிக்காதீர்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு காட்டும் ஆர்வத்தை எத்தனை சதவிகிதம் விளையாட்டுக்குக் காட்டுகிறீர்கள். சிறு குழந்தைகளை சினிமா பாட்டுகள் பாடவும், சினிமாவை பார்க்கவும் விடுகிறோம் ஏன்? அவனை துப்பாக்கி சூடும் நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள். விளையாடுங்கள் உங்கள் குழந்தைகளை விளையாட்டில் அக்கறை காட்டுங்கள்