பொதுமக்களுக்கு முக்கிய அறிவுப்பு.தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட வழக்கின் அபராதத் தொகையினை தமிழ் நாட்டிலுள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியிடமும் செலுத்தலாம்

மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா IPS. அவர்களது உத்தரவின் படியும்,, போக்குவரத்து துணை ஆணையர் திரு. ஈஸ்வரன் அவர்கள், உதவி ஆணையர் திரு. திருமலை குமார் அவர்கள், ஆகியோர்களின் அறிவுரையின் படியும், தமிழ் நாட்டில் எந்த ஒரு பகுதியிலும் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட வழக்கின் அபராத தொகையினை தமிழ்நாட்டிலூள்ள எந்த ஒரு காவல் துறை அதிகாரியிடமும் செலுத்தலாம், மற்றும் PayTm, G Pay, PhonePe, Net.Banking மூலமும் செலுத்தலாம், என்ற வசதியை காவல்துறையினர் அறிவித்துள்ளனர், இது சம்பந்தமாக பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாநகரின் முக்கிய சிக்னல்களில்.. மோட்டார் வாகன சட்ட வழக்கின் அபராத தொகையினை செலுத்தும் இந்த புதிய வழி முறைகளான ஆன்லைன் மற்றும் QR CODE ஸ்கேன் செய்து எளிதாக செலுத்துவது பற்றியும் விளம்பர பதாகைகள், துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று தெப்பக்குளம் பகுதியில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
