*மதுரையில் சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சி வகுப்பை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன், அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள.
மதுரை காவல்துறை தலைவர்,தென்மண்டல அதிகாரி உத்திரவின் பேரில், மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் தென் மண்டலத்தில் உள்ள, மதுரை மாவட்டம் ,மதுரை மாநகர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அனைத்து காவல் அதிகாரிகளுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பான பயிற்சிவகுப்பு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பயிற்சிக்கு மும்பையை சேர்ந்த கேதான் கம்பியூட்டர் நிறுவனத்தார், மூலம் அதன் கிளைநிறுவனர், திரு. மனோஜ் துபே அவர்கள் பயிற்சி வகுப்பினை 23/09/2021 தேதி நடத்தினார்கள்.
இப்பயிற்சி வகுப்பில், Call Details Record (CDR) விவரங்களை ஆராய்தல், குற்றங்களை ஆராய்ந்து,தொலைதொடர்பு விவரங்களுடன் பொருத்யுதல் & வங்கி (பேங்க்) மோசடி குற்றங்களை ஆராய்தல், ஆண்டிராய்டு மொபைல் போன்கள் மூலம் துரிதமாக, சைபர் குற்றங்களைபற்றி, விவரங்களை சேகரித்தல் மற்றும் சைபர் கருவிகளைப் பயன் படுத்துவது தொடர்பாக விரிவான பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் மேற்படி மாவட்டங்களைச் சேர்ந்த 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள்,7 காவல்ஆய்வாளர்கள்,14 பயிற்சி காவல்துறை கண்காணிப்பாளர்கள்,உட்பட100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இப்பயிற்சி வகுப்பினை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு. V.பாஸ்கரன் அவர்கள் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்கள்.
