விருதுநகர் மாவட்டம்:-
அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கவும் கண்டுபிடிக்கவும் அருப்புக்கோட்டையில் ஆட்டோ ஓட்டுனர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் நகரின் ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் பங்கேற்றனர்.
குறிப்பாக சந்தேகபடும்படியாக உள்ளூர், வெளியூர் நபர்கள் ஆட்டோவில் ஏறி பயணிக்கும்போது அவர்களை பற்றிய விபரங்களை காவல்நிலையத்தில் தெரிவிக்கவேண்டுமெனவும் அதற்கு ஏதுவாக நகர்காவல் நிலையத்தின் செல்போன் எண்களை ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு கொடுக்கும் தகவல்கள் இரகசியமாக வைக்கப்படும் என்று ஆய்வாளர் தெரிவித்தார்.
