மீண்டும் பாலியல் வழக்கில் கைதானார் போலிச் சாமியார்: திருச்சி குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு..!!
சென்னை புத்தகரத்தில் யோகக்குடில் என்ற பெயரில் ஆசிரமம் நடத்திவரும் சர்ச்சை சாமியார் சிவக்குமார், 69 ஜாதிகள் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் மெய்வழி மதத்தையும், மெய்வழி தெய்வத்தையும் அவமதித்து, மதவுணர்வுகள் கடுமையாக புண்படும்படி தகாத வார்த்தை கூறி தொடர்ச்சியாக இருபதுக்கும் மேற்ப்பட்ட யூடியூப் வீடியோக்கள் வெளியிட்டுள்ளார்.
மேலும் அனைத்து மத கடவுளர்களையும் அவமதித்து, பெண்களை ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக கடந்த 26.7.2021 அன்று திருச்சி மாநகர கமிஷனர் அருண் அவர்களிடம், மெய்வழியை சார்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து யோக குடில் சிவக்குமார் மீது புகார் அளித்துள்ளனர். அளித்த புகார் உறையூர் காவல் நிலையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு 6.8.2021 அன்று குற்ற எண்.607/21ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கில் சிவக்குமார் கைது நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு 29.09.2021-ல் திருச்சி குற்றவியல் நடுவர் எண் 4 (JM4) முன்பாக நீதிமன்ற காவலுக்காக ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி திரு. குமார் அவர்கள் இ.த.ச பிரிவுகள் 153, 153A(i)(a), 295(A), 298, 504, 505(1)(b) , 505 (2) ஆகிய குற்றச் செயல்களுக்காக சிவக்குமாரை 13.10.2021 வரை இவ்வழக்கில் சிறையிலடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இவர் போன்ற போலிகளை ஆரம்ப கட்டத்திலேயே நிறுத்தி குண்டர் தடுப்பு சட்டம் போட்டால் மட்டுமே மற்ற போலி சாமியார்களுக்கு அச்சம் ஏற்படும். இல்லாவிட்டால் பிறகு பெரிய விளைவுகளை இந்த சமூதாயம் சந்திக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
