இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா காவல்துறை துணை
கண்காணிப்பாளர் பங்கேற்பு.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் கிராமத்தில் சட்டவிரோத செயல்களில் அதிகமாக நடைபெற்று வருவதை அடுத்து காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை வெளிப்படுத்தும் விதமாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விளையாட்டு உபகரணங்கள் காவல்துறையின் சார்பில் இராஜபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் வழங்கினார்.
செஸ், கேரம் போர்டு, வாலிபால் உபகரணம் வழங்கி விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சேத்தூர் ஊரக சார்பு ஆய்வாளர் கருத்தபாண்டி இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் மகேஸ்வரி சுந்தரராஜபுரம் பஞ்சாயத்து தலைவி சரோஜா பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் விளையாட்டுகளை பார்வையிட்டும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் மேலும் சிறுவர்களுக்கு செஸ் போர்டு உள்ளிட்ட விவரங்களை வழங்கிய காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சியில் அமைந்தது இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.