திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் ஆறுகளில் தண்ணீர் அதிகமாக தேங்கி உள்ளதால் குளிக்க, விளையாட செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் நீரின் ஆழத்தை அறியாமல் மூழ்கி இறக்கும் நிலை ஏற்படுகிறது
இதை தடுக்கும் பொருட்டு மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நீர் அதிகம் தேங்கி இருக்கும் மற்றும் ஏற்கெனவே நீர்ல் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ள ஆபத்தான நீர்நிலை பகுதிகள் மொத்தம் 268 பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆபத்தான பகுதி என்று கண்டறியப்பட்டுள்ள 268 இடங்களில் பொதுப்பணித்துறை, வருவாய் மற்றும் காவல்துறை மூலம் 110 இடங்களில் எச்சரிக்கைப் பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது மற்ற இடங்களிலும் உடனடியாக எச்சரிக்கை பலகை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது மேலும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தன்னார்வலர்களை காவலர்களுடன் இணைந்து பகல் மற்றும் இரவு ரோந்து அனுப்பியும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற நீச்சல் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களை ஆபத்தான பகுதியில் நிறுத்தியும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்ட தலைமையகத்திலும் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற காவல் படையினர் அவசர நிகழ்வுகளை எதிர்கொள்ள தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் அவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.