
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் தலைமையில் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் N.K.செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் 10-10-2021 ம் தேதியன்று, நெல்லை மாநகர பகுதிகளில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடைக்கு மதுபானம் வாங்க வரும் நபர்களை கண்காணிக்க CCTV கேமராகளை பொருத்தமாறும், அதிக அளவிலான மதுபானங்களை வாங்கி செல்லும் நபர்களை பற்றிய தகவலை காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கும் படியும். பெரும் தொகை பணத்தை கொண்டு செல்லும் போது காவல்துறையின் உதவியுடன் கொண்டு செல்லுமாறும் ஆலோசனை வழங்கினார்கள். உடன் சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் திரு.T.P. சுரேஷ் குமார் அவர்கள் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் திரு.K.சுரேஷ்குமார் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.நாகசங்கர் அவர்கள், நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பிறைச்சந்திரன் அவர்கள் மற்றும் டாஸ்மாக் மதுபான கடை மேற்பார்வையாளர்கள் 32 பேர் கலந்து கொண்டார்கள்.
