
ஆயுதத்துடன் வாலிபர் கைது
மதுரை எஸ் எஸ் காலனி எஸ்,ஐ அழகுமுத்து தலைமையில் ஏட்டுகள் செந்தில்குமார் சுரேஷ் மற்றும் போலீசார் சம்மட்டிபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணிகளை மேற்கொண்டனர் அப்போது போலீசாரின் சரித்திர பதிவேடுகளில் குற்றவாளியாக இருக்கும் பொன்மேனி பகுதியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் கருவாயன் என்ற பிரபாகரன் வயது 25 அப்பகுதியில் நின்று இருந்தார் அவர் போலீசாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றார் இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர் அப்போது அவர் ஒரு அரிவாள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது இது குறித்து கேட்டபோது எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆயுதத்துடன் இருப்பதாக கூறியுள்ளார் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரபாகரனை கைது செய்தனர்
