நிமிடங்கள் கூட தாமதிக்காமல் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் நடவடிக்கை
அரியலூரில் உள்ள நிர்மலா காந்தி நடுநிலை பள்ளி அருகே செயல்படும் வரும் அரசு டாஸ்மாக் (மதுபான விற்பனை ) கடையை அகற்ற கோரி ஆறாம் வகுப்பு மாணவி இ. ம. இளந்தென்றல் என்ற மாணவி தனது கைப்பட எழுதிய மனுவோடு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.. அதுதொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த புகைப்படம் மற்றும் கோரிக்கை மனு ஆகியவற்றை தலைமைச் செயலாளர் திரு வெ. இறையன்பு ஐஏஎஸ் அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தேன்.. அதனை சில விநாடிகளிலேயே பரிசீலித்து அரியலூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்து பள்ளிக்கூடம் அருகே உள்ள மதுபானக் கடையை அப்புறப்படுத்த அறிவுரை வழங்கினார்.அதன் பேரில் அந்த மதுபானக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.. கடையை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் துவங்கி இருக்கின்றன..
தலைமை செயலர் அவர்களின் இந்த மின்னல் வேக நடவடிக்கையை பொது மக்கள் அனைவரும் பாராட்டுகின்றனர்.
