மதுரை மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் இன்று 20.10.21 காலை ஆய்வு செய்தார்கள்.
மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், மதுரை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்றும், வாகனங்களின் பயன்பாடுகள் மற்றும் செயல்படும் விதம் குறித்தும் ஆய்வு செய்தார்கள்.
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் வாகன ஓட்டுனர்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்றும், சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் அனைத்து காவல் வாகனங்களை சிறப்பாக பராமரித்து வரவும், அதேபோல் வாகனத்தில் ஏற்படும் சிறு குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து வரவும் அறிவுரைகளை வழங்கினார்கள். சிறப்பாக பராமரித்த காவலர்களை பாராட்டினார்கள்.
இந்த வாகன ஆய்வின் போது மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. விக்னேஸ்வரன் அவர்கள், ஆயுதப்படை வாகனப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. விஜயகாந்த் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
