Police Department News

பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 21 ம் தேதி காவலர் வீர வணக்க நாள்,அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் காவலர் வீர வணக்க நாள் 21 ம் தேதி கடை பிடிக்கப்படுகிறது

இதனை முன்னிட்டு சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் தமிழக காவல் துறை டி.ஜி.பி., திரு. சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர், பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்காக காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், முப்படை அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர் அதன்பின் 132 குண்டுகள் முழுங்க காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது மக்கள் அமைதியாக சுதந்திரமாக வாழ காவல் துறை அதிகாரிகள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர் என்று குறிப்பிட்டார், தீவிர வாதத்தை எதிர்த்தும் காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர் என்றும் டி.ஜி.பி., சைலேந்திரபாபு நினைவு கூர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published.