கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் காரியாபட்டி காவல்துறையினர்
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே குழந்தை திருமணம், பெண்கள் குழந்தைகள் காணவில்லை, போக்சோவில் இளைஞர்கள் கைது என தொடர்ந்து இது போன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் காரியாபட்டி காவல் நிலையத்தின் சார்பில் கிராமங்கள் தோறும் பொதுமக்களிடம் காவல் ஆய்வாளர் மூக்கன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கபட்டனர்.
அதன் அடிப்படையில் இன்று கே.கரிசல்குளம், வக்கணாங்குண்டு ஆகிய கிராமங்களில் காவல் ஆய்வாளர் மூக்கன், சார்பு ஆய்வாளர்கள் அசோக்குமார், ஆனந்தஜோதி ஆகியோர் நேரில் சென்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய சார்பு ஆய்வாளர் அசோக்குமார் பாலியல் போன்ற பிரச்சனை சம்பவம் நடந்தாலோ, பாலியல் துன்புறுத்தலில் யாராவது ஈடுபட்டாலோ உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். வேலைக்கு சென்று வரும் பெண்கள் பிரச்சினைகளை சந்தித்தால், அவர்களது பாதுகாப்பு உதவிக்கு என 181 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் உங்கள் பகுதியில் இருந்தால் அவர்கள் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
