
சென்னை மெரினா கடற்கரையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் காவலர் வீர வணக்க நிகழ்ச்சி
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் இன்று (22.10.2021) மாலை சுமார் 5.15 மணியளவில் மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலை அருகில் நடைபெறும் காவலர் வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பணியின் போது வீரமரணமடைந்த காவல் துறையினர் மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் தலையாய முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவல் துறையினரின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகிறார். இதனை தொடர்ந்து பொதுமக்களும் அஞ்சலி செலுத்துகின்றனர். மேலும் சென்னை பெருநகர காவல் துறை, வாத்திய இசைக்குழுவினரின் (Police Band Team) இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது
