
நிருபரை மிரட்டிய போலி ஆன்மீகவாதிகள் தட்டிக்கேட்ட காவல்துறை
திருச்சியில் பெண் நிருபர் ஒருவரை மிரட்டிய வெளியூரை சேர்ந்த போலி ஆன்மீகவாதிகள் சிலர் ஆன்மீகத்தில் தாங்கள் பெரிய குரு என்று கூறிக் கொண்டு உலா வந்தனர்
அந்தப் போலி ஆன்மீகவாதக் கும்பல் மீது ஒரு புகார் பெண் நிருபருக்கு கிடைக்கப் பெற்று அதன் உண்மைத் தன்மையை ஆராய ஆரம்பித்தார் நிருபர்.
எங்கே தாங்கள் செய்யும் குற்றங்களை நிருபர் கண்டு பிடித்து விடுவாரோ என்ற பயத்தில் நிருபரை வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் தொடர்ந்து மிரட்ட ஆரம்பித்தது அந்த போலி ஆன்மீகவாதக் கும்பல்.
நிருபர் எல்லா ஆதாரங்களையும் திரட்டி திருச்சி காவல் கண்காணிப்பாளர் திரு.மூர்த்தி அவர்களிடம் புகார் மனு அளித்தார்.
புகார் மனு திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
சோமரசம்பேட்டை காவல் ஆய்வாளர் திரு. உதயகுமார் அவர்கள் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக் அவர்கள் விசாரணை மேற்கொண்டார்.
மிரட்டியவர்கள் அனைவரும் வெளி மாவட்டம் என்பதால் விசாரணைக்கு ஆஜராகும்படி போன் மூலம் தகவல் அளித்தார் உதவி ஆய்வாளர் கார்த்திக்.
போலி ஆன்மீகவாதக் கும்பலும் விசாரணைக்கு ஆஜராக, நிருபரும் ஆஜராகினார். விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் உண்மைத்தன்மையை இருதரப்பிலும் கேட்டறிந்து பேச ஆரம்பித்தார்.
நிருபருக்கு தவறை வெளிக்கொண்டு வர எல்லா அதிகாரமும் உண்டு நிருபர் உங்கள் மீது சுமத்தப்படும் குற்றம் பொய் என்றால் நீங்கள் (போலி ஆன்மீகவாதிகள் ) சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே அதை விட்டு விட்டு வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் அவதூறு பரப்புவது கொலை மிரட்டல் விடுவது இதுபோன்ற தொடர்ந்து நிருபரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உங்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்று போலி ஆன்மீகவாதிகளை எச்சரித்தார்.
எங்களை மன்னித்து விடுங்கள் இனி இது போன்ற காரியத்தில் ஈடுபட மாட்டோம் என்று நிருபரிடமும் காவல்துறையிடமும் மன்னிப்பு கேட்டனர் போலி ஆன்மீகவாதிகள்
உண்மை தன்மையை (ஆடியோக்கள்)கேட்டு நிருபருக்கு பக்கபலமாக போலிகளை விட்டு விளாசிய இளம் உதவி ஆய்வாளர் கார்த்திக் அவர்களுக்கு ராயல் சல்யூட்.
