: அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த நபரை கன்டித்த பேருந்து நடத்துனருக்கு கொலை மிரட்டல் விட்டவர் கைது, திடீர் நகர் போலீசார் நடவடிக்கை
மதுரை, திருமங்களம் NGO நகரை சேர்ந்த குருசாமி மகன் ராமசாமி வயது 54/2021, இவர் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் M.C.B.கிளையில் நடத்துனராக கடந்த 3 ஆண்டுகளாக பணி புரிந்து வருகிறார் இவர் கடந்த 20 ம் தேதி மதுரை பெரியார் நிலையத்திலிருந்து போக்குவரத்து நகருக்கு பேருந்தை இயக்குவதற்காக சம்பவ இடத்தில் பேருந்துதை நிறுத்தி வைத்திருந்த போது மாலை சுமார் 5.45 மணியளவில் பேருந்தின் பின்புறமிருந்து சந்தம் வந்ததை தொடர்ந்து பின்னால் சென்று பார்த்தார் அப்போது அங்கே ஒரு நபர் பேருந்தின் பின்னால் உள்ள பம்பரை பிடித்து இழுத்து கொண்டிருந்தது தெரிய வந்தது. ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டதற்கு என்னையே கேள்வி கேட்கிறாயா என்று ஆபாசமாக திட்டி கண்ணத்தில் அறைந்து விட்டு பேருந்தின் கண்ணாடியை கைகளால் குத்தி உடைத்து விட்டு அங்கிருந்த கல்லை எடுத்து நடத்துனரை தாக்கி கொன்று விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார் உடனே நடத்துனர் திடீர் நகர் C1, காவல் நிலையத்தில் புகாரளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆயவாளர் சுரேஷ் அவர்கள் அந்த நபரை பிடித்து விசாரதை நடத்தியதில் அவர் மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சூர்யா என தெரிய வந்தது, அதன்பின் ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. S.கார்த்திக் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
