
பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டி கொலை, மதுரை திருப்பாலை போலீசார் விசாரணை
மதுரை யாதவர் கல்லூரி சண்முகா நகர் பகுதியில் நாய் குட்டி ஒன்று கம்பியால் கட்டப்பட்டு இறந்த நிலையில் மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது விலங்குகள் நல ஆர்வலர்கள் முருகேஸ்வரி, புகழேந்தி அங்கு சென்று பார்த்த போது பிறந்து 40 நாட்களேயான நாய்குட்டியை சிலரால் அடித்து கொல்லப்பட்டிருந்தது தெரிய வந்தது முருகேஸ்வரி திருப்பாலை போலீசில் அளித்த புகாரில் விலங்குகள் வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது
இப்பகுதியில் நாய்குட்டிகள் உள்ளிட்ட செல்ல பிராணிகளை சிலர் குறி வைத்து தாக்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
