மதுரை மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொருட்டும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சார்பாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது
இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டம் கீழவளவு சரகத்திற்கு உட்பட்ட சாத்தமங்கலம் கிராமத்தில் அக்கிராம வெளிநாடு வாழ் இளைஞர்கள் சார்பில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டது. சாத்தமங்கலம் கிராமத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி.பாஸ்கரன் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.
மேலும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல் துறைக்கு பேருதவியாக இருந்த கிராம இளைஞர்களின் முயற்சிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்கள். அதே போல் இன்றைக்கு மூன்றாவது கண்ணாக திகழக்கூடிய சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை இதே போல் அனைத்து கிராமங்களிலும் வைக்க தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் இளைஞர்களுக்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த துவக்க நிகழ்ச்சியில் மேலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. பிரபாகரன், காவல் ஆய்வாளர் திரு.சார்லஸ் காவல் உதவி ஆய்வாளர் கீழவளவு காவல் நிலையம் மற்றும் சாத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. ரகு சாத்தமங்கலம் கிராம அம்பலகாரர்கள் மற்றும் தன்னார்வ இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
