
மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் வெளியீட்டு விழா, மதுரை காவல் ஆணையர் வெளியிட்டார்
மதுரையில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வாரம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர் காவல் துறை சார்பாக சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சாலை பாதுகாப்பு கீதம் என்ற பெயரில் போக்கு வரத்து விழிப்புணர்வு பாடலை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. நரேந்திரன் நாயர் அவர்கள் வெளியிட்டார். இதனை மதுரை போக்கு வரத்து காவல் துணை ஆணையர் திரு. ஆறுமுகசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகர துணை ஆணையர்கள் சாயி பிரனீத் அரவிந்த் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த போக்கு வரத்து விழிப்புணர்வு பாடலை மதுரை தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்கள் உருவாக்கத்தில் இயக்குனர் ஜான் தேவா அவர்க்குகளின் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜெரால்ட்டு இசையமைத்துள்ளார் இந்த விழிப்புணர்வு பாடலை மதுரை மதிச்சியம் பாலா அவர்க்குகள் பாடியுள்ளார். இதில் சாலை போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்து வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
