மினி மாரத்தான்: எஸ்.பி. துவக்கம்!
தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பில் ‘காவலர் வீர வணக்க நாளை” முன்னிட்டு ஆண் மற்றும் பெண்களுக்கான மினி மாரத்தான் போட்டியை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தருவை மைதானத்தில் இன்று துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இதில் ஆண்களுக்கான தொடரோட்ட போட்டியில் வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லுரி மாணவர் பசுபதி முதலிடத்தையும், சென்னை லயோலா கல்லூரி மாணவர் அஜித் 2வது இடத்தையும், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா கல்லூரி மாணவர் நவீன்பிரபு 3வது இடத்தையும், பெண்களுக்கான தொடரோட்ட போட்டியில் புதூர் நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலா முதலிடத்தையும், விளாத்திக்குளம் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி ராதிகா 2வது இடத்தையும், அதே பள்ளியை சேர்ந்த மாணவி ஜெயமாலினி 3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு எஸ்.பி. ஜெயக்குமார் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் முதல் 10 இடங்களை பிடித்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி கூப்பன்களையும் வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்றப்பிரிவு ஏ.டி.எஸ்.பி. இளங்கோவன் மேற்பார்வையில் ஆயுதப்படை ஆய்வாளர் சுடலைமுத்து, எஸ்.ஐ.கள் சக்திவேல், நங்கையர் மூர்த்தி, தலைமை காவலர்கள் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
இதற்கான பாதுகாப்பு பணிகளை தென்பாகம் ஆய்வாளர் ஆனந்தராஜன், போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், தென்பாகம் எஸ்.ஐ. முத்துகணேஷ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கொண்டனர். மேலும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பால்ச்சாமி, மாவட்ட தடகள செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் அருள்சகாயம் மற்றும் உடல்கல்வி ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
