Police Department News

உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய 2013 -பேட்ச் காவலர் குடும்பத்திற்கு காவல் நண்பர்கள் சார்பாக நிதியுதவி.

உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய 2013 -பேட்ச் காவலர் குடும்பத்திற்கு காவல் நண்பர்கள் சார்பாக நிதியுதவி.

தமிழ்நாடு காவல்துறையில் 2013 ஆம் பணியில் சேர்ந்து எதிர்பாராத விதமாகவும் உடல்நலக்குறைவாலும் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு கடந்த ஒன்றை ஆண்டாக 2013 பேட்ச் சார்பாக அனைத்து காவலர்களும் சமுகவலைதளம் மூலமாக ஒன்றினைந்து நிதிஉதவி செய்து வருகின்றனர்…..

அந்தவகையில் கடந்தாண்டு உயிர் இழந்த
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தின குமார்,, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விஜயபாலாஜி உயிர் இழந்ததை அறிந்த 2013ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் உருவாக்கிய உதவிகரம் குழு வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தள குழுக்களில் ஒன்றிணைந்து சுமார் 28 இலட்சம் ரூபாய் நிதி திரட்டினர்…

திரட்டிய நிதியில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த

1)தெய்வத்திரு.ரத்தின குமார் குடும்பத்திற்கு
17.50 லட்சமும்,

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த

2)தெய்வத்திரு.விஐயபாலாஜி குடும்பத்திற்கு
10.50 லட்சமும்

மாநில அட்மின்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நண்பர்கள் அவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று உதவிகளை வழங்கினார்…

அத்துடன் இறந்த நண்பர்களின் நினைவாக அவர்களின் வீட்டின் அருகே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் நடந்தன…..

இறந்த காவலர்களின் குடும்பத்தாரிடம் பேசிய பொழுது எங்கள் மகன் இறந்து போனதால் எங்களின் குடும்பம் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளானது பொருளாதார ரீதியாக மிகவும், பாதிக்கப்பட்டுள்ளோம்.. தற்போது 2013 ஆம் ஆண்டு காவலர்கள் செய்த நிதி உதவி எங்கள் குடும்பத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் பேருதவியாக இருந்தது உதவி செய்த அனைத்து 2013-பேட்ச் காவலர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.