Police Department News

ஆன்லைன் வேலை : கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் மோசடி கும்பல் – சைபர் கிரைம் எச்சரிக்கை

ஆன்லைன் வேலை : கல்லூரி மாணவிகளை குறிவைக்கும் மோசடி கும்பல் – சைபர் கிரைம் எச்சரிக்கை

ஆன்லைனில் வேலை தேடும் கல்லூரி மாணவிகள் மற்றும் படித்த குடும்ப தலைவிகளை குறி வைத்து மோசடி செய்யும் கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி விட்டது. படித்த மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு கல்வி த்தகுதியின் அடிப்படையில் வேலைகள் கிடைப்ப தில்லை. இதனால் இளைஞர்கள் கிடைத்த வேலையை செய்ய வேண்டும் என்ற மன நிலைக்கு வந்து விடுகின்றனர். சிலர் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் சில மோசமான இணைய செயலிகள் மூலம் ஏமாற்றம் அடைகின்றனர்.

தமிழகத்தில் ஏராளமான மக்கள் வேலை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களை குறி வைத்து பல டிஜிட்டல் தளங்கள் பண மோசடியில் ஈடுபடுகிறது. வேலையில்லா நபர்கள் வேலை பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு செயலிகளை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் முழு விபரங்களையும் கொடுக்கின்றனர்.

இதை வைத்து மோசடி செய்யும் நபர்கள் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை குறிவைத்து வேலை தேடும் நபர்களின் தொலைபேசி எண்களை கைப்பற்றி அதன் மூலம் அவர்களிடம் தொடர்பு கொண்டு பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணத்தை பெற்று மோசடி செய்து விடுகின்றனர்.

மோசடி நபர்கள் ஒரே நாளில் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம். ரூ.100 முதலீடு செய்தால் ரூ.300 லாபம் பெறலாம். ரூ.300 முதலீடு செய்தால் ரூ.500 லாபம் பெறலாம். ரூ.500 முதலீடு செய்தால் ரூ.1000 வரை லாபம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறுகின்றனர்.

மேலும் சில பிரபலமான தனியார் நிறுவனங்களின் பெயர்களை கூறி ஏமாற்றுகின்றனர். மேலும் பட வாய்ப்புகள் வாங்கி தருவதாவும் கூறி பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெ க்டர் மீனா கூறியதாவது;-

ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்யும் கும்பல் மீது சமீப காலத்தில் 30 புகார்கள் வந்துள்ளது. நேற்று முன்தினம் முத்தனம்பட்டியை சேர்ந்த கல்லூரி இளம்பெண் ஒருவர் ரூ.18 லட்சத்து 40 ஆயிரம் வரை இந்த மோசடி கும்பலால் பணத்தை இழந்துள்ளார்.

வேலை தரும் பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களிடம் எவ்வித பணமும் வசூலிப்பது இல்லை. ஒருவர் வேலை வாங்கி தருவதாக உங்களை தொடர்பு கொண்டால் முதலில் அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். அவர்கள் கூறும் நிறுவனங்களில் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

குறுகிய காலத்தில் பணத்தை சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். தெரியாத யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.