மதுரை அருகே உசிலம்பட்டியை சேர்ந்த பெண்ணின் பெயரில் போலி முகநூல், பழனியை சேர்ந்த நபர் கைது
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் உத்தரவின்படி மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பல் வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 05.08.21 ம் தேதி உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தான் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்த தனது புகைப்படத்தை பயன்படுத்தி யாரோ முகநூலில் போலியான கணக்கை உருவாக்கி அதில் அந்த பெண்ணின் புகைப்படத்தையும் கைபேசி எண்ணையும் பதிவேற்றம் செய்ததாகவும் அதனால் அவருக்கு தொடர்ந்து தொந்தரவு அழைப்புகள் வருவதாக கொடுத்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல்நிலையத்தில் தகவல் தொழில் நுட்பச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது.
டமேலும் இவ்வழக்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் திரு. மணி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் பிரிவு அவர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் திருமதி. சார்மிங் S ஒய்ஸ்லின் அவர்களின் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வழக்கில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் பிரசாத் 12.10.21 அன்று கைது செய்யப்பட்டு மேலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொது மக்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கவும் சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் அது குறித்து அச்சம் இன்றி தயக்கம் இன்றி காவல் துறையில் புகார் அளிக்கலாம் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.பாஸ்கரன் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.