
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பற்றி விழிப்புணர்வு.
வடசென்னையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது பற்றி விழிப்புணர்வு.
ராயபுரத்தில் உள்ள தீயணைப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை சார்பாக வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பட்டாசு வெடிப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணியை மாவட்ட அலுவலர் வடக்கு ராஜேஷ்கண்ணா மற்றும் ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட அலுவலர் நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இதில் உதவி மாவட்ட அலுவலர்கள் சிவசங்கரன்,ஜெய்சங்கர், ராயபுரம் நிலைய அலுவலர் பரமேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. மேலும் இதில் தண்டையார்பேட்டை நிலை அலுவலர் சண்முகம் வண்ணாரப்பேட்டை நிலை அலுவலர் கண்ணன் மற்றும் 25-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனம் மற்றும் ஜீப்புகளில் ஊர்வலமாக ராயபுரம் சாலை, கல்மண்டபம் கிழக்கு சாலை, எம்.சி. சாலை, ஆகிய பகுதிகளில் பேரணியாக சென்று, தீபாவளிக்கு பொதுமக்கள் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் இருசக்கர வாகனங்களில் பட்டாசுகளின் வடிவம் போன்ற பதாகைகள் வைத்துக்கொண்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
