
தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்களின் உத்தரவின்படி தேவர் ஜெயந்தி, மற்றும் தீபாவளி திருநாளில் சட்ட விதிமுறைகளை மீறியவர்களின் மீது காவல்துறையினர் நடவடிக்கை
தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. T.S.அன்பு ,IPS., (மதுரை) அவர்களின் உத்தரவின் பேரில் தென் மாவட்டங்களில் 30.10.2021 ம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி குருபூஜை சட்ட விதிகளை மீறி செயல்பட்ட 1544 நபர்கள் மீது இது வரை 190 வழக்குகள் போடப்பட்டு அதில் 33 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் காணொலி காட்சி மூலம் விதிமுறைகளை மீறி செயல்பட்டவர்களை கண்டறிந்து தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
4.11.2021−ம் தேதி தீபாவளித் திருநாளன்று உச்ச நீதி மன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்த அவர்கள் மீது 233 வழக்குகள் போடப்பட்டு 256 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய நபர்கள் மீது 809 வழக்குகள் போடப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
