
தூத்துகுடியில் தப்பி ஓடிய கைதி கைது
தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் செல்வசதீஷ் வயது 24, அவரது நண்பரை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார் இவர் மீது ஏற்கனவே பல கொலை, மற்றும் கொலை முயற்ச்சி வழக்குகள் உள்ளன.
சில தினங்கக் முன்பு திருநெல்வேலி மத்திய சிறையிலிருந்து தூத்துகுடி நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செல்வசதீஷ் கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்றார். இரண்டு தனிப்படைகள் அமைத்து அவரை தேடி வந்த நிலையில் நேற்று அவரது அலைபேசி சிக்னலை வைத்து கோயம்புத்தூர் அருகே அவரை கைது செய்தனர்.மீண்டும் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
