Police Department News

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சட்ட விரோதமாக மதுபானம் விற்ற நபர் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நேற்று 08.11.2021 அன்று மாலை 6.30 மணியளவில் காரியாபட்டி , சேவல்பட்டி சந்திப்பில் ரோந்து செய்த போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் காரியாபட்டியை சேர்ந்த பாண்டி மகன் முருகானந்தம் வயது 38/2021, என தெரிய வந்தது, அவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் 36 மது பானப் பாட்டிகள் இனம் தெரியாத நபர்களுக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவரிடமிருந்த மது பாட்டிகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.