
பாலக்கோடு பேளாரஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மூலிகை தோட்டத்தை நேரில் வந்து பார்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.பள்ளி வளாகத்தில் வேப்பன், புங்கன், மூங்கில், புன்னைமரம், பாதம், வில்வம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மூலிகை மர செடிகளை நடவு செய்து மாணவர்கள் வளர்த்து வருகின்றனர்.
இதையறிந்து மூலிகை தோட்டத்தை பார்வையிட்டு மாவட்ட காவல் துறை சார்பாக மூலிகை செடியை நட்டு வைத்து,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் பேசியதாவது
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாமகாவும்
எதிர்கால சந்ததிகளை காக்கும் பொருட்டு பாராம்பரிய மூலிகை மரங்களை வளர்க்க மாணவர்களின் சிந்தனையில் உருவான இந்த பூங்காக்களை நிஜத்தில் உருவாக்கி அசத்திய மாணவர்களையும் அதற்க்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு மாணவரும் ஒரு செடியை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காவல் துனைகண்காணிப்பாளர் சிந்து, காவல்ஆய்வாளர் தவமணி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரியப்பன், தலைமை ஆசிரியர் பாபுசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
