
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது
விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. M.மனோகர் IPS., அவர்கள் உத்தரவின்பேரில் இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இராமகிருஷ்ணன் மேற்பார்வையில் இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜா அவர்களின் தலைமையிலான உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் மற்றும் காவல்துறையினர் தீவிர தேடுதல் பணியில் மேற் கொண்டதில் மனுதாரர் மீரான் மைதீன் s/o திவான் மைதீன் சம்மந்தபுரம் அளித்த புகாரின் அடிப்படையில் எதிரியை கைது செய்தனர்.
எதிரி ஜானகிராமன் என்பவர் திருவள்ளூவர் மாவட்டம் வேப்பம்பட்டு என்கிற ஊரில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். 1 வது எதிரி மணிகண்டனுக்கு பெண் பார்த்து கொடுப்பதற்கு மணிகண்டனை தொடர்பு கொண்டுள்ளனர் இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஜானகிராமன் தான் மதுரை கலெக்ட்டர் ஆபீஸில் எம்ளாய்மெண்ட் செக்ஸனில் வேலை பார்த்து வருவதாகவும் யாருக்காவது அரசு வேலை வேண்டுமென்றால் தான் வாங்கித் தருவதாகவும் கூறி ஆசை வார்த்தை காட்டி உள்ளார். ஜானகிராமனும் மணிகண்டனும் பல நபர்களுக்கு வேலை வாங்கி கொடுத்ததாகவும் நம்பவைத்துள்ளார். இதனை நம்பி மனுதாரர் மீரான் மைதீன் சுமார் ரூபாய் 2,68,000/− google pay மூலமாக அனுப்பி வைத்துள்ளார். இது சம்பந்தமாக மனுதாரர் எதிரிகளை தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். எதிரிகளிடம் தனது பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட போது வாதியை கூலிப்படை வைத்து கொன்று விடுவதாக கொலை மிரட்டல் செய்துள்ளார். மனுதாரர் இராஜபாளையம் குற்றவியல் நீதி மன்றத்தில் கொடுத்த புகாரின் பேரில் எதிரிகளை தீவிர தேடுதலில் கைது செய்தனர்.
அரசு வேலை வாங்கி கொடுப்பதாக கூறி சுமார் 2,68,000/- பணத்தை மோசடி செய்த எதிரிகள் 1. மணிகண்டன், 2 இராஜாராம் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு எதிரி ராஜாராமை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு ராஜா வழக்கு பதிவு செய்து எதிரிகளை கைது செய்தார்
