ஆட்டோவில் அடையாளம் தெரியாத நபர் விட்ட சென்ற பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். கொடுங்கையூர், முத்தமிழ் நகர், 4-வது பிளாக், என்ற முகவரியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் திரு.D.முரளி வ/56, த/பெ. துரைசாமி என்பவர் கடந்த 16.11.2019 அன்று 11.30 மணியளவில் F-2 எழும்பூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட காந்தி இர்வின் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையாளர் அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத ஒரு நபர் சேத்துப்பட்டு செல்லவேண்டி ஆட்டோவில் குடிபோதையில் ஏறியுள்ளார். ஆட்டோ, பாந்தியன் சாலை வழியாக சென்றபோது அங்கே பேருந்து நிறுத்தம் அருகே தன்னுடைய மனைவி நிற்பதாகக் கூறி ஆட்டோவை நிறுத்தி இறங்கி, ஒரு பெண்ணிடம் சண்டை போட்டுள்ளார். அவர் மீண்டும் ஆட்டோவில் ஏற தாமதமானதால் ஆட்டோ ஓட்டுனர் முரளி புறப்பட்டு சென்று விட்டார். பின்பு சேத்துப்பட்டு அருகே வந்து பார்த்தபோது பின்னால் ஒரு Bag இருந்ததை பார்த்து அதை பிரித்து பார்த்துள்ளார். அதில் சுமார் 15 சவரன் தங்க நகைகள் இருந்துள்ளது. உடனே ஆட்டோ ஓட்டுநர் நேர்மையாக மேற்படி தங்க நகைகள் அடங்கிய பையை F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். ஆட்டோவில் அடையாளம் தரியாத நபர் தவற விட்ட பையை நேர்மையான முறையில் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று 19.11.2019 நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.