சென்னை, பெரவள்ளூர், SRB வடக்கு தெருவில் வசித்துவரும் மாலா வ/38, க/பெ.முருகன் என்பவர் தனது 16 வயது மகள் மற்றும் 13 வயது மகனுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு சொத்து சம்மந்தமாக மாலாவின் கணவருடன் பிறந்த 4 அக்கா, 2 அண்ணன் ஆகியோருக்குமிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இது சம்மந்தமாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த 17.11.2019 அன்று மதியம் 3.30 மணியளவில் மேற்படி மாலா தனது மகன் மற்றும் மகளுடன் தற்கொலை செய்யும் எண்ணத்தில் பெரவள்ளூர் லோகோ இரயில் நிலைய தண்டவாளத்தில் இறங்கியபோது அவ்வழியே ரோந்து சென்று கொண்டிருந்த K-5 பெரவள்ளளூர் சுற்றுக் காவல் ஆளிநர்கள் விரைந்து சென்று தற்கொலை செய்ய முயன்ற பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளை காப்பாற்றி அறிவுரைகள் கூறி K-9 திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பணியின் போது சிறப்பாக செயல்பட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மற்றும் 2 குழந்தைகளை காப்பாற்றிய K-5 பெரவள்ளளூர் சுற்றுக் காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் திரு.D.கபிலன் மற்றும் தலைமைக்காவலர் திரு.C.சேகர் (த.கா.35164) ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று 19.11.2019 நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.