இன்று மதுரை மாவட்ட ஆயுதப்படையில் மதுரை சரக காவல் துணைத் தலைவர் திருமதி.N.காமினி இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள்.
இன்று காலை ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி N. காமினி IPS அவர்கள் ஏற்றுக்கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V பாஸ்கரன்., அவர்களுடன் காவலர்கள் அணிவகுப்பை பார்வையிட்டார்கள். அதன் பின்னர் ஆயுதப்படையின் படைக் கலங்கள், காவலர்களின் உடை பொருட்களை பார்வையிட்டு அவர்களின் குறைகள் பற்றி கேட்டறிந்ததுடன், ஆயுதப்படை காவலர்கள் பணியாற்றும் போது காவலர்களுக்கான சமுதாய பொறுப்பு, முக்கியத்துவம் குறித்தும் பணிபுரிய வேண்டிய விதம் குறித்து அறிவுரை வழங்கினார்கள்.*
மேலும், மதுரை மாவட்டத்தில் காவல் துறையினருக்கு வழங்கப்பட்ட அனைத்து ரக வாகனங்கள், மதுரை மாவட்ட ஆயுதப் படையில் இயங்கி வரும் சட்டவிரோத கூட்டத்தை தண்ணீர் பீச்சி கலைக்கும் வருண், கண்ணீர் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா, பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் பயன்படுத்தும் நடமாடும் கழிப்பறை வாகனம் முதலிய வாகனங்களையும் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொள்ள வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தார்கள்.* சிறந்த முறையில் வாகனங்களை பராமரித்து வந்த வாகன ஓட்டுனர்களுக்கு வெகுமதி வழங்கினார்கள்.
மேலும் இந்த ஆய்வின்போது உடன் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு. விக்னேஸ்வரன் காவல் ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
