Police Department News

மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் நிலைய கட்டிடம் கட்ட தமிழக அரசு கடந்த ஆண்டு ஆணை பிறப்பித்தது

மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்திற்கு புதிதாக காவல் நிலைய கட்டிடம் கட்ட தமிழக அரசு கடந்த ஆண்டு ஆணை பிறப்பித்தது

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி காவல் நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூபாய் 78 லட்சம் ஒதுக்கீடு செய்தது. சுமார் 3958 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு இந்த வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டிடத்தினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் காணொலி காட்சி மூலம் இன்று காலை 1030 மணிக்கு திறந்து வைத்தார்கள்.

இக் கட்டிட திறப்பு விழாவின்போது ஆஸ்டின்பட்டி காவல்நிலையத்தில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள். இவ்விழாவின் போது உயர்திரு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அனீஸ் சேகர் இ.ஆ.ப. அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு வி பாஸ்கரன் அவர்கள் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published.