சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்தும் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் குற்றப்பிரிவு அவர்கள்.
12.12.2021 காலை 6.00 மணியளவில்
சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் குவியல் குவியலாக உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தீவிரமாக சுத்தம் செய்த J5 சாஸ்திரி நகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு ராஜாராம் அவர்கள்.
தூய்மை உள்ள இடத்தில் தான் தெய்வீகம் இருக்கும். இறைவனை காண செல்லும் ஆலயங்கள் மிக தூய்மையாக காட்சி தரும். ஆதலால் தான் மன அமைதி தேடி மக்கள் ஆலயங்களுக்கு செல்கிறார்கள்.
தூய்மையான கல்லூரி ,பள்ளிகள் தான் மாணவர்களுக்கு தெளிவான அறிவை வழங்குகிறது. இயல்பு வாழ்க்கையில் அகத்தாலும் புறத்தாலும் தூய்மையை கடைப்பிடிப்பவர்கள் சமூகத்தில் தனி சிறப்பு வாய்ந்தவர்களாக காணப்படுவர். தூய்மையை பேணி வாழ்வில் உயர நாம் முயலவேண்டும்.
வெளியில் சுத்தம் இருப்பதனை போலவே மனிதர்கள் மனதளவிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். உண்மை நேர்மை மனிதநேயம் போன்ற குண இயல்புகள் ஒரு மனிதனின் மனத்தூய்மையை வெளிப்படுத்தும். இப்படிப்பட்ட நல்ல அறிவுரைகளை கல்லூரி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். காவல்துறையோடு இணைந்து பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்த பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட RCC Blue Waves Ch TN President Thiru.Gopi, மற்றும்
1.Thiru.Rajarathinam
2.Thiru.Selvakumar
3.Thiru.Devakumar
4.Thiru.Govindaraj
5.ThiruJaigandh
மற்றும் இந்த முகாமில் கலந்துகொண்ட எத்திராஜ் கல்லூரி மாணவர்கள் ,ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள்,ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவர்கள், லயோலா கல்லூரி மாணவர்கள்.