வாசனை இருக்காது! LSD போதை பொருள்.. பெற்றோர்களே உஷார்! கண்டுபிடிப்பது எப்படி? ஐபிஎஸ் அதிகாரி விளக்கம்
போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், LSD போதை பொருள் என்றால் என்ன?.. வாசனையே இல்லாத இந்த போதை பொருளை பிள்ளைகள் பயன்படுத்தினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?.. இந்த போதைப்பொருளை பிள்ளைகள் பயன்படுத்தினால் எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தன் விளக்கி கூறியுள்ளார்.
‘டார்க்நெட்’ இணையதளம் மூலமாக , ஜெர்மனியில் கொள்முதல் செய்து, கூட்டாளிகள் வாயிலாக நாடு முழுதும், எல்எஸ்டி. எனப்படும் ‘ஸ்டாம்ப்’ வடிவிலான போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த முக்கிய புள்ளி உட்பட 15 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், LSD போதை பொருள் என்றால் என்ன? என்பது குறித்தும்.. எல்எஸ்டி போதை பொருளை பயன்படுத்துவோருக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்தும், வாசனையே இல்லாத இந்த போதை பொருளை பிள்ளைகள் பயன்படுத்தினால் கண்டுபிடிப்பது எப்படி? என்பது தொடர்பாகவும் பெற்றோரும், ஆசிரியரும் எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அரவிந்தன் ஐபிஎஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-
12 மணி நேரம் போதை தரும்: எல்எஸ்டி என்ற போதைப்பொருளானது, ஜெர்மனியில் இருந்து வருகிறது. மற்ற போதைப்பொருளை விட இதனை மைக்ரோ கிராம் அளவில் எடுத்துக்கொண்டால் கூட போதை அதிகமாக ஏறும். கஞ்சா போதைப்பொருளுக்கு எல்லாம் 20 கிலோ தான் கமெர்சியல் குவாண்டிட்டி. ஆனால் இந்த எல்எஸ்டி போதைப்பொருளுக்கு 0.1 கிராம் தான் கமெர்சியல் குவாண்டிட்டி.
எனவே மைக்ரோ கிராம் அளவில் இந்த போதைப்பொருளை உட்கொண்டால் கூட போதை அதிகமாக வரும். இந்த போதைப்பொருளை கண்டுபிடிப்பது என்பது ரொம்ம சவாலானது. ஆர்டர் லெஸ், கலர் லெஸ் மற்றும் டேஸ்ட் லெஸ். இது ஒரு பேப்பரின் திக்னெசில் தான் இருக்கும். இப்போது இளைஞர்களிடையே தான் அதிகமாக இந்த போதைப்பொருள் புழக்கம் இருக்கிறது. கிட்டத்தட்ட இது 12 மணி நேரம் போதை தர கூடியது.
மூளையில் பாதிப்பு: ஓவர் டோஸ் ஆகிவிட்டால் மூளையில் மோசமான பாதிப்பினை ஏற்படுத்தும். ஸ்டம்ப் வடிவில் தான் இருக்கும். கலர் கிடையாது. டேஸ்ட் தெரியாது என்பதால் இதனை கண்டுபிடிப்பது மிகவும் சவாலானது. இந்த எல்எஸ்டி போதைப்பொருளால், மாசியா, ட்ரமல்ஸ், சைக்கோசிஸ், மூளையில் பாதிப்பு ஏற்படும். ஒரு நபர் தொடர்ந்து இந்த போதைப்பொருளை பயன்படுத்தி வந்தால், அவரால் ஒரு முடிவை கூட சரியாக எடுக்க முடியாது.
பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்: சிறு விஷயத்தில் கூட எது சரி.. எது தவறு.. என்று அவர்களால் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்படும். விளைவுகள் உடல் ரீதியாக அதிமாக இருக்கும் போதைப்பொருளில் இது ஒன்று. பெற்றோர்கள் எல்லாரும் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆன்லைனில் உங்கள் குழந்தைகள் எதாவது பொருட்களை அடிக்கடி வாங்குகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும். இதேபோல் அடிக்கடி கொரியரில் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
வாசனை தெரியாது என்பதால்: ஆன்லைனில் அதிக நேரம் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். 12 மணி நேரம் போதை இருக்கும். ஆனால் இந்த போதைப்பொருளை உட்கொண்டால் சுத்தமாக வாசனையே இருக்காது. எனவே நமது குழந்தைகள் போதையில் தான் இருக்கிறார்களா என்பதனை வாசனையால் நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அவரது நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தான் நாம் கண்டுபிடிக்க முடியும். எனவே பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.