
கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணியை TSP காவலர் காப்பாற்றினார்.Adyar District J5 காவல் நிலையம்.
இடம்.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை கவர்னர் கெஸ்ட்ஹவுஸ் பின்புறம் உள்ள கடற்கரை.
இன்று 12.12.21 காலை 10.30 மணிக்கு பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை கவர்னர் கெஸ்ட்ஹவுஸ் பின்புறம் உள்ள கடல் பகுதியில் திருமதி. மகேஸ்வரி பெ/வ 59 க/பெ சந்திரன் எண்.45, சாலை மாநகர், புரசைவாக்கம், சென்னை என்பவர் கடலில் விழுந்து தற்கொலை செய்வதற்காக கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்றவரை கடற்கரை பாதுகாப்பு பணியில் இருந்தTSP காவலர் திரு. ராஜா ஆ/வ 47 த/பெ மாணிக்கம் TSP XII Battalion ‘C’company என்பவர் காப்பாற்றி கடற்கரைக்கு அழைத்து வந்து ஜே5 சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கூறியதன் பேரில் மேற்படி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் பிள்ளை மற்றும் மருமகள் சரிவர கவனிக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்ததால் இன்று தனது கணவர் இறந்த தினம் என்பதனால் தற்கொலை செய்ய முயற்சித்ததாக கூறினார்.
அவரது மகன் கோடீஸ்வரன் என்பவருக்கு தகவல் கூறி மகனை காவல் நிலையம் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
