தவறிய ஆவணங்களை கண்டுபிடித்து ஒப்படைத்த காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜாராம் (குற்றப்பிரிவு ) J5 சாஸ்திரி நகர் காவல் நிலையம்.
உரிமைகுரல்ஓட்டுநர்தொழிற்சங்கம் சார்பாக பெசன்ட்நகர் குற்றப்பிரிவு காவல்ஆய்வாளர்_ராஜாராம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நாசர் என்கிற ஒரு ஓட்டுநர் தன்னுடைய பர்ஸ்சை தொலைத்துவிடுகிறார்
அதில் ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு பான் கார்டு போன்ற அனைத்து அசல் ஆவணங்களும் இருந்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார் புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் ராஜாராம் அவர்கள்
உடனடியாக ஓட்டுனர் நாசர் அவர்களை அழைத்துக்கொண்டு அவர் பர்சை தொலைத்த இடத்திற்கு சென்று பலரிடம் விசாரணை செய்து சில மணி நேரங்களில் பர்ஸ்சை மீட்டு ஒப்படைத்திருக்கிறார்
காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற கூற்றை உண்மையாக்கும் விதமாக செயல்பட்ட ஆய்வாளர் ராஜாராம் போன்ற அதிகாரிகளை நாம் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் ஏதோ சில காவல்துறை அதிகாரிகள் செய்யும் தவறுகளை பரப்பும் நாம் இதுபோன்ற மெய்சிலிர்க்க வைக்கும் காவல்துறை அதிகாரிகளின் பணிகளையும் பாராட்ட வேண்டும்
உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் ஆய்வாளர் ராஜாராம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம் இதுபோன்ற அதிகாரிகளால் தான் காவல்துறையின் மாண்பு இன்றுவரை காக்கப்பட்டு கொண்டிருக்கிறது