J.8நீலாங்கரை கா.நி
crno. 877/2001 U/S 302 IPC
கார் டிரைவர் கொலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது.
2001ஆம் ஆண்டு நீலாங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிரேதம் இருப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் வந்தது. அதனடிப்படையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி 2005 முதல் 2021 வரை சுமார் 15 ஆண்டுகாலமாக நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அடையாறு துணை ஆணையாளர் அவர்களின் உத்தரவு படி நீலாங்கரை உதவி ஆணையாளர் அவர்களின் அறிவுரைப்படி நீலாங்கரை காவல் ஆய்வாளர் திரு.மகேஷ் குமார் அவர்களின் தலைமையில்
SI-பிரதீப்
HC-பிரதீப் குமார்
Gr1-இன்பராஜ்
கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி (ராஜி என்கின்ற உருளை ராஜி) என்ற எதிரி
தனி படையினர் சாமர்த்தியமாக பிடித்தனர். 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எதிரியை துரிதமாக கைது செய்த தனிப்படையினரை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்கள்.
(குறிப்பு கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட தலைமறைவு எதிரி பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர் கடந்த இருபது வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற கூட்டுக் கொள்ளையில் மிகவும் கைதேர்ந்த குற்றவாளிகள் இந்த எதிரிக்கு திருப்பூர் மாவட்ட கொலை வழக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு கூட்டுக்கொள்ளை வழக்கும் மற்றும் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி நீதிமன்றம் சென்று வெளியே வந்துள்ளார்)
