
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணியின் போது தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 லட்சத்திற்கான வரையோலையையும், பணியின்போது இறந்த மேலும் 30 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ3 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 15 லட்சத்திற்கான வரைவோலைகளையும் வழங்கினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவசிசிக்சை பெற்ற போக்குவரத்து தலைமைக் காவலருக்கு காவல் ஆணையாளர் காவலர் நலநிதியிலிருந்து ரூ.5.2 லட்சத்தை ரொக்கமாக வழங்கினார்.
