சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் J11 கண்ணகி நகர் காவல் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
ஜே11 கண்ணகி நகர் காவல் நிலைய குற்ற எண் 938/2021 கொலை முயற்சி வழக்கில் பிரதான எதிரியும் கண்ணகி நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு எதிரியுமான கண்ணகி நகரைச் சேர்ந்த கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி என்பவன் கடந்த 26.06.2021 ம் தேதி கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடத்தில் முன்விரோதம் காரணமாக சந்தியா என்ற பெண்ணை கொலை முயற்சி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தான். மேற்படி கிச்சா என்பவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தர்மபுரி, விழுப்புரம், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, ஆகிய இடங்களில் தீவிரமாக தேடி வந்தநிலையில் தனது மனைவி பிரியா என்பவருடன் தொடர்பில் இருந்த கேளம்பாக்கம் மாம்பழத்தை சேர்ந்த சேகர் என்கிற நாய் சேகர் என்பவரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சேகர் மற்றும் தனது மனைவி பிரியாவை கொலை செய்யும் நோக்கத்தில் சுற்றி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. மேலும் எதிரி கிச்சா என்று ஒன்று தனது தொலைபேசியில் சாதாரண சிம் கார்டு போட்டு பேசினாள் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று ஜெயிலில் அறிமுகமான கூட்டாளிகளின் ஆலோசனையின் பேரில் இதற்காக தனியாக ப்ளே ஸ்டோரில் ஆப் பதிவிறக்கம் செய்து பிறநாடுகளில் பயன்படுத்தப்படும் செல்போன் எண்ணை பணம் கொடுத்து பிளே ஆப் மூலம் பெற்று மற்றவர்களிடம் தொடர்புகொண்டு பேசி மிரட்டி பணம் பறிக்கும் கஞ்சா விற்பனை செய்தும் வந்துள்ளார். மேலும் இவர் மீது செங்கல்பட்டு காயார் காவல் நிலையத்தில் நடந்த 2017ஆம் வருடம் ஒரு கொலை வழக்கும் திருப்போரூர் காவல் நிலையத்தில் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜராகி தனது எதிரிகள் திரும்பி வரும்போது வழியில் மறைந்து இருந்து மூன்று நபர்களை தாக்கியதாக ஒரு கொலை முயற்சி வழக்கும் மற்றும் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் 5 கொலை முயற்சி வழக்கும் கஞ்சா விற்பனை செய்த வழக்கும் அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
மேற்படி கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய வேண்டி சென்னை மாநகர காவல் ஆணையர் திரு .சங்கர் ஜிவால் IPS , காவல் கூடுதல் ஆணையாளர் (தெற்கு ) Dr.N. கண்ணன் IPS , தெற்கு மண்டலம் காவல் இணை ஆணையாளர் திரு.K.S நரேந்திர நாயர் IPS ஆகியோர்களின் உத்தரவின்பேரில், அடையாறு காவல் மாவட்டம் துணை ஆணையாளர் (பொறுப்பு) திரு. P. மகேந்திரன் TPS அவர்களின் நேரடி பார்வையில் துரைப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் திரு.A .K.ரவி மற்றும் கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் திரு. ரா. ஆல்பின் ராஜ் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று 14. 12 .2021ம் தேதி தனி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவனது கூட்டாளிகளான ஜெகன் பார்த்திபன் சந்தோஷ் ராஜராஜன் ஆகியோர்கள் பெருங்குடி அருகில் அடையாறு மாவட்ட சைபர் பிரிவு போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்டனர் மேலும் அவர்களிடமிருந்து எதிரிகள் பயன்படுத்திய ஆட்டோ/ 1 இருசக்கர 2 வாகனம் கைபேசி ,மோடம்கள் வீச்சரிவாள்கள் 5 மற்றும் வெடி மருந்து பொருட்கள் ஆகியவைகள் கைப்பற்றப்பட்டது. இவர்களை கைது செய்த தனிப்படையினரை சென்னை காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
