தனியார் பள்ளிகளில் போதைப்பொருட்களின் தீமையையும் அதனால் ஏற்படும் சமூக சீரழிவு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்
மதுரை மாநகரில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலபேர் சமீபகாலமாக போதை பொருளுக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்கின்றனர். இதை தடுக்கும் விதமாக மதுரை மாநகர காவல் ஆணையர் திரு பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் அறிவுறுத்தலின் பெயரில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் திரு பிரபு அவர்களின் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்கள் திரு சந்தான போஸ் மற்றும் திரு சேதுராமன் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் போதைப்பொருட்களின் தீமையையும் அதனால் ஏற்படும் சமூக சீரழிவு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் பள்ளி அருகில் உள்ள கடைகளில் சிகரெட் புகையிலை மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்தனர். இந்நிகழ்வில் பேசிய திரு சந்தான போஸ் அவர்கள் இளைஞர்களே இந்தியாவின் எதிர்காலம் என்றும் இளைஞர்கள் தங்களது உடலையும் மனதையும் திடமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதுபோன்ற போதை பொருளுக்கு அடிமையாகி தங்களது வாழ்க்கையையும் தங்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பையும் சீரழித்து விடக்கூடாது என்று கூறினார்.
