
வாகன விதிமீறல் அபராத தொகை செலுத்த உதவி மையம். மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி E – Challan மிஷின் வாயிலாக வழக்குப்பதிவு
செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வரப்படுகிறது . போக்குவரத்து காவல்துறை சார்பாக மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறலுக்காக வாகன ஓட்டிகள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையினை இதுநாள்வரை வழக்குப்பதிவு செய்த அந்தந்த காவல்துறை அதிகாரிகள், இ – சேவை மையங்கள், Paytm , Google Pay , Phone pe , Internet banking மற்றும் தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்படும் மோட்டார் வாகன வழங்குகளின் அபராதத்தொகையை தமிழகத்தின் எந்த ஒரு காவல் அதிகாரியிடமும் செலுத்தக்கூடிய வசதிகள் ஏற்படுத்தி , அவை நடைமுறையில் இருந்து வருகிறது . ஆனால் தற்போது மதுரை மாநகர வாகன ஓட்டிகள் சிரமமின்றி அபராத தொகையினை செலுத்துவதற்காக காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., அவர்கள் கீழ்க்கண்ட 5 காவல் உதவி் மையங்களில் (1) கோரிப்பாளையம் சந்திப்பு காவல் உதவி மையம்
(2) கட்டபொம்மன் சிலை சந்திப்பு காவல் உதவி மையம்
(3) தெற்குவாசல் சந்திப்பு காவல் உதவி மையம்
(4) தெப்பக்குளம் சந்திப்பு காவல் உதவி மையம்
(5) பூ மார்க்கெட் சந்திப்பு காவல் உதவி மையம்.
அபராதத்தொகையினை சிரமமின்றி செலுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்கள்.மேலும் வாகன ஓட்டிகள் அனைவரும் அரசிற்கும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது .
