
21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தல ஆறு மாதம் சிறைத் தண்டனை மற்றும் தலா 90 ஆயிரம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்
கடந்த 02/02/2019 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் வாகனத் தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை அண்ணா நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாண்டி கோவில் பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும் வகையில் கையில் பேக்குடன் இருந்த நபர்கள் போலீசாரை பார்த்ததும் ஓட முயற்சித்தவர்களை பிடித்து விசாரித்து சோதனை செய்த போது அவர்கள் கையில் இருந்த பேக்கில்
இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான 21.200 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூபாய் 20 ஆயிரம் இருந்ததை கைப்பற்றி அதை கடத்தி வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கொக்குடையான் பட்டியைச் சேர்ந்த பாலுசாமி மகன் பாலகிருஷ்ணன் வயது 50 மற்றும் ராஜபாண்டி மனைவி லாவண்யா வயது 36 ஆகியோரை கைது செய்து கடத்தப்பட்ட கஞ்சாவை கைப்பற்றி
வழக்கு பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டது
இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் சிறப்பு போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது
இந்த நிலையில் கடந்த இருபதாம் தேதி சாட்சிகளின் விசாரணை முடிவுற்று தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருமதி அல்லி அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருளான. கஞ்சாவை கடத்திய குற்றவாளிகளான பாலகிருஷ்ணன் மற்றும் லாவண்யா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆனதால் எதிரிகளை குற்றவாளிகள் என தீர்மானித்து எதிரிகளுக்கு தலா ஆறு மாதம் சிறைத் தண்டனையும் தல 20000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்கள்
இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட மதுரை அண்ணாநகர் காவல துறையினரை மதுரை போலீஸ் கமிஷனர் வெகுவாக பாராட்டினார்
