Police Recruitment

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை

மதுரை மாநகர் போக்குவரத்து காவல் துணை ஆணையர் அவர்கள் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அறிவுரை

மதுரை மாநகர போக்குவரத்து காவல் மற்றும் மதுரை போக்குவரத்து துறை இணைந்து நடத்திய ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் ஆட்டோ உரிமையாளர்கள் ஆகியோர் களுக்கான போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம் 24.12.21 அன்று மாலை 5.00 மணியளவில்.. மதுரை, தெப்பக்குளம் அருகில் நடைபெற்றது,, இதில் மதுரை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் திரு, ஆறுமுகச் சாமி அவர்கள், போக்குவரத்து உதவி ஆணையர் நகரம், திரு திருமலைக்குமார் போக்குவரத்து உதவி ஆணையர், போக்குவரத்து உதவி ஆணையர் தல்லாகுளம் திரு மாரியப்பன், அவர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள்., மதுரை வடக்கு மதுரை தெற்கு மதுரை மத்தியம்,,, தலைமையில் சுமார் 300 தொழிலாளர்களுடன் நடைபெற்றது.. ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விதிமுறைப்படி மூன்று நபர்கள் மட்டுமே ஏற்றிக்கொண்டு ஆட்டோவை இயக்கலாம் மேலும் ஆட்டோ ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் பயணிகளை அமர வைத்து வாகனத்தை இயக்கக்கக்கூடாது என்றும், பயணிகள் அமரக்கூடிய இருக்கையை சட்டத்திற்கு புறம்பாக வடிவமைத்து ஓட்டக் கூடாது என்றும் முறையாக சீருடை அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் பேருந்து நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோவை நிறுத்தி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கக்கூடாது என்றும் ஆட்டோவுக்கு முறையான பெர்மிட் வைத்திருந்துதான் இயக்க வேண்டும் என்று விழிப்புணர்வு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது விழிப்புணர்வு கூட்டத்தில் மேலும் விதிமுறை மீறி ஓட்டக்கூடிய வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது உடன் வாகனத்தை பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. தங்கமணி அவர்கள் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.