
மதுரை கூடல் நகரில் கார் ஓட்டுனர் கொலையா? போலீசார் விசாரணை
மதுரை மாநகர் செல்லூர் அஹிம்சாபுரம் 4 வது தெருவில் வசித்து வருபவர் கனேசன் மகன் சத்தியசீலன் வயது 42/2021,இவர் அலுமனிய பேப்ரிக் கான்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். இவரது சகோதரன் பொன்ராமன் நரிகுடி அருகேயுள்ள மறையூரில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார் இவர் மதுரையில் தன் சகோரனை பார்க்க வரும்போதெல்லாம் தனது நண்பன் யதுநந்தகிருஷ்ணுடன் சேர்ந்து தண்ணியடித்து விட்டு சிறு சிறு தகராறுகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்
இவர் கடந்த 26 ம் தேதி தனது தந்தையின் திதி காரியத்திற்கு வந்து திதி காரித்தை முடித்து விட்டு சென்றவர் மறு நாள் 27 ம் தேதிமதுரை வந்து பாலம் ஸ்டேசன் ரோட்டில் மது போதையில் சுற்றியுள்ளார்
மறுநாள் 28 ம் தேதி யதுநந்தகிருஷ்ணனின் தந்தை ராமராஜ் அவர்கள் சத்தியசீனுக்கு போன் செய்து தனது மகன் யதுநந்தகிருஷ்ணும் பொன்ராஜூம் தனது வீட்டு மாடியில் தண்ணியடித்து தராறில் ஈடுபட்டதில் போன்ராஜூவிற்கு அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக கூறியுள்ளார் உடனே பொன்ராஜ் சகோதரன் சத்தியசீலன் D3,கூடல்புதூர் காவல் நிலையம் வந்து புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆயய்வாளர் திரு ஆறுமுகம் அவர்கள், காவல் உதவி ஆணையர் திரு. விஜய்குமார் அவர்களின் மேற்பார்வையில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
